×

மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதிக்கு கஞ்சா சப்ளை: சிறைக்காவலர் சஸ்பெண்ட்!

மதுரை: மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த சிறைக்காவலர் ஆனந்தராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கார்த்திக் (26) என்பவர் கஞ்சா வழக்கில் 2 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த கார்த்திக்கிடம் 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கார்த்திக்கிடம் விசாரணை நடத்தியதில் சிறைக் காவலர் ஆனந்தராஜ், கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

 

The post மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதிக்கு கஞ்சா சப்ளை: சிறைக்காவலர் சஸ்பெண்ட்! appeared first on Dinakaran.

Tags : Madurai Central Jail ,Madurai ,Jailer Anandaraj ,Karthik ,Central Jail ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...