×

“கோரிக்கைகள் உண்மையானவை…” பாவனா மைதானத்தை விவசாயிகளை அடைக்கும் சிறையாக மாற்ற கெஜ்ரிவால் அரசு மறுப்பு!!

டெல்லி : டெல்லி பாவனா மைதானத்தை விவசாயிகளை அடைக்கும் சிறையாக மாற்ற கெஜ்ரிவால் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் இன்று டெல்லி நோக்கிய பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேரணியில் சுமார் 200 விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இந்த விவசாயிகளின் பேரணியை மேற்கோள்காட்டி டெல்லி பாவனா மைதானத்தை சிறைச் சாலையாக மாற்ற ஒன்றிய அரசு டெல்லி அரசு கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தது.

இந்த கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி தலைமையி;லான ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மீ கட்சி INDIA கூட்டணியில் உள்ளது. ஆம் ஆத்மீ கட்சிக்கும் பாஜகவிற்கு மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக அமலாக்கத்துறை,சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தன்னை கைது செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில், பாவனா மைதானத்தில் விவசாயிகளை சிறை வைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், “விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஒவ்வொரு குடிமகனின் அரசியல் சாசன உரிமை. எனவே விவசாயிகளை கைது செய்வது தவறானது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு எட்டப்பட வேண்டும்,”என்று ஒன்றிய அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

The post “கோரிக்கைகள் உண்மையானவை…” பாவனா மைதானத்தை விவசாயிகளை அடைக்கும் சிறையாக மாற்ற கெஜ்ரிவால் அரசு மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bhavana ,Delhi ,Kejriwal ,Delhi Bhavana ,EU government ,Maidan ,
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...