×

ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்: இருசக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் கைது

டெல்லி: முற்றுகை போராட்டத்துக்காக இருசக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்றிய அரசு நேற்று நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளநிலையில் தடுப்புகளை போலீசார் குவித்து வைத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. சர்வதேச எல்லையை போல் பஞ்சாப் – அரியானா எல்லையில் துணை ராணுவ படைகளை குவித்துள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து அணி, அணியாக விவசாயிகள் பேரணியாக சென்றனர். ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் டெல்லியை பேரணியாக செல்கின்றனர். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2020-ல் நடைபெற்ற தொடர் போராட்டத்தின்போது ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் பத்தேகர் சாகிப் என்ற இடத்தில் டிராக்டர்களில் விவசாயிகள் 5 பேரணியாக டெல்லி நோக்கில் செல்கின்றனர்.

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட உள்ளனர். பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து விவசாயிகள் குவிவதால் டெல்லி எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.

The post ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்: இருசக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Union government ,Delhi ,Dinakaran ,
× RELATED ஈடி, ஐடி, சிபிஐயை தொடர்ந்து தேர்தல்...