×

திருத்தணி தொகுதி இரா.கி. பேட்டை வட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் இருந்து நீர் எடுக்க ரூ.44.5 கோடியில் திட்டம்: கே.என்.நேரு பதில்

சென்னை : திருத்தணி தொகுதி இரா.கி. பேட்டை வட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் இருந்து நீர் எடுக்க ரூ.44.5 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரம் தொடங்கி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில் பொன்னை ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா என உறுப்பினர் எஸ்.சந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருத்தணி தொகுதி இரா.கி. பேட்டை வட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் இருந்து நீர் எடுக்க ரூ.44.5 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 15 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன; இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும். இரா.கி.பேட்டை வட்டத்துக்கு பொன்னை ஆற்றில் நீர் ஆதாரம் இல்லாததால் கொசஸ்தலையில் நீர் எடுக்க திட்டம். திருத்தணி தொகுதியில் 4 ஊராட்சிகளில் உள்ள 53,540 பேருக்கு நாள் ஒன்றுக்கு 2.15 mld குடிநீர் வசதி செய்துதர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

The post திருத்தணி தொகுதி இரா.கி. பேட்டை வட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் இருந்து நீர் எடுக்க ரூ.44.5 கோடியில் திட்டம்: கே.என்.நேரு பதில் appeared first on Dinakaran.

Tags : Constituency ,Kosastala River ,Bhattai Circle ,K. N. Nehru ,Chennai ,Thiruthani Constituency ,K. Minister ,Tamil Nadu Legislative Assembly ,Thiruthani ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...