×

அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு விரைவில் துவக்க விழா நடைபெறும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு விரைவில் துவக்க விழா நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரம் தொடங்கி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அப்போது அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் சோதனை ஓட்டத்தில் சில ஏரி, குளங்களுக்கு நீர் வரவில்லை என அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்; சில நில உரிமையாளருக்கு பணம் ஒப்படைக்காததால் ஒருசில இடங்களில் மட்டும் குழாய் பதிக்கும் பணி நிறைவடையவில்லை. குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அனைத்து ஏரி, குளத்திற்கு நீர்செல்லும். நீர் ஏற்றம் செய்யும் பணியை விரைவாக துரிதமாக இந்த அரசு செய்து கொடுக்கும். நில உரிமையாளர்களுக்கு பணம் தராததால் குழாய் பதிக்கும் பணி ஒரு சில இடங்களில் நிறைவடையவில்லை. அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு விரைவில் துவக்க விழா நடைபெறும் இவ்வாறு கூறினார்.

 

 

The post அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு விரைவில் துவக்க விழா நடைபெறும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Atikadavu-Avinasi Project ,Minister ,Duraimurugan ,Chennai ,Atikadavu-Avinasi ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...