×

கொச்சி அருகே கோயில் விழாவுக்காக கொண்டு வந்த வெடிபொருள் வெடித்து சிதறியது: 2 பேர் பலி, 11 பேர் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருப்பபூணித்துறாவில் புதியகாவு கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் கடைசி 2 நாட்களில் வாணவேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். நேற்று கடைசி நாள் வாண வேடிக்கை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நேற்று காலை ஒரு வேனில் வெடிபொருட்கள் கொண்டுவரப்பட்டன. அவை அனைத்தும் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டன. வேனிலிருந்து அவற்றை இறக்கி வைக்கும் போது எதிர்பாராதமாக வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின. இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். 12 பேர் படுகாயமடைந்தனர். வெடிபொருள் கொண்டு வந்த வேன் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. அருகில் இருந்த ஒரு கார் எரிந்து சாம்பலானது. காயடைந்தவர்கள் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திவாகரன் (55) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கொச்சி அருகே கோயில் விழாவுக்காக கொண்டு வந்த வெடிபொருள் வெடித்து சிதறியது: 2 பேர் பலி, 11 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : brought for ,temple festival ,Kochi ,Thiruvananthapuram ,Thiruppoonithura ,Kerala ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...