×

காங்கிரஸ் அரசு தயாரித்த உரையை முழுமையாக படித்த கர்நாடக கவர்னர்: ரூ.18,171 கோடி வறட்சி நிவாரணம் தராததாக ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு

பெங்களூரு: பெங்களூரு விதான சவுதாவில் பட்ஜெட் கூட்டத்தொடர் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையுடன் தொடங்கியது. காலை 11 மணிக்கு அவைக்கு வந்த கவர்னர் பேரவை, மேலவை கூட்டுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். கர்நாடக காங்கிரஸ் அரசு தயாரித்த உரையை கவர்னர் தாவர்சந்த் கெலாட் முழுமையாக வாசித்தார். அவர் பேசியதாவது: வளர்ச்சி பாதையில் கர்நாடக அரசு பயணித்து நிலைத்தன்மையுடன் திகழ்கிறது. அதுமட்டும் இன்றி அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றி 7 கோடி மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் சமம், அனைவருக்கும் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக அரசு உத்திரவாத திட்டங்களை அமல்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது. மக்களின் வாழ்க்கைக்கு உத்திரவாத திட்டங்கள் மட்டும் போதாது என்பதை அரசு உணர்ந்து வளர்ச்சி திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

காங்கிரஸ் அரசின் உத்திரவாத திட்டங்களால் 1.20 கோடிக்கும் அதிக குடும்பத்தினர் வறுமை கோட்டில் இருந்து நடுத்தர வர்க்கமாக உயர்ந்துள்ளனர். இத்திட்டங்களால் விவசாயிகளின் தற்கொலை குறைந்துள்ளது. மாநில அரசின் நிர்வாகம், உத்திரவாத திட்டங்களை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்துள்ளது. கடந்த 8 மாதத்தில் ரூ.77 ஆயிரம் கோடி புதிய முதலீடு மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தி தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.18,171.44 கோடி நிதி தரவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், ஒன்றிய அரசு நிதி தரவில்லை. அதே நேரம் வறட்சி நிவாரணத்தை விரைவாக தர வேண்டும் என்பதை வலியுறுத்தியாக எடுத்து அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் கர்நாடக அரசு எடுத்து வருகிறது என்றார்.

The post காங்கிரஸ் அரசு தயாரித்த உரையை முழுமையாக படித்த கர்நாடக கவர்னர்: ரூ.18,171 கோடி வறட்சி நிவாரணம் தராததாக ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,governor ,Congress government ,Union government ,BENGALURU ,Vidhana Soudha ,Davarchand Khelat ,House ,Upper House ,Thavarchand ,Congress government of Karnataka ,Governor of Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...