×

இலங்கை, மொரீஷியசில் யுபிஐ சேவை தொடக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரீஷியசில் மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் யுபிஐ சேவை மற்றும் மொரீஷியசில் இந்தியாவின் ரூபே கார்டு ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்கு சேவைகளை தொடங்கி வைத்தனர். விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்திய பெருங்கடல் பிராந்தியின் 3 நட்பு நாடுகளுக்கும் இன்று சிறப்புமிக்க நாள். ஏனெனில் எங்கள் வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளோம். யுபிஐ சேவை இரு நாடுகளுக்கும் உதவும். இந்தியாவில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை பேரழிவாக இருந்தாலும், சுகாதாரம் தொடர்பானதாக இருந்தாலும், பொருளாதார ரீதியிலும், சர்வதேச அரங்கில் ஆதரவளிப்பதிலும் இந்தியா தான் முதலில் பதிலளிக்கிறது. இது தொடரும். மேலும், முத்தரப்பு சுற்றுலா பயணிகளுக்கு யுபிஐ சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

The post இலங்கை, மொரீஷியசில் யுபிஐ சேவை தொடக்கம்: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : UPI ,Sri Lanka, Mauritius ,PM Modi ,New Delhi ,Sri Lanka ,Mauritius ,India ,Modi ,
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்