×

பரூக் அப்துல்லா இன்று ஆஜராக ஈடி சம்மன்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், நகர் எம்பியுமான 86 வயதாகும் பரூக் அப்துல்லா கடந்த மாதம் 11ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், அவருக்கு அமலாக்கத்துறை மீண்டும் நேற்று புதிய சம்மன் அனுப்பியது. அதில், ஸ்ரீநகரில் உள்ள அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பரூக் அப்துல்லா இன்று ஆஜராக ஈடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : ED ,Farooq Abdullah ,Srinagar ,CBI ,Enforcement Directorate ,Jammu and Kashmir Cricket Association ,National Conference Party ,nagar ,Dinakaran ,
× RELATED உடல்நிலை காரணமாக பரூக் அப்துல்லா...