×

ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

விருதுநகர், பிப்.13: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கோட்டநத்தம் ஊராட்சியில் கிராம சாலை திட்டத்தில் ரூ.3.42 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி, வச்சக்காரப்பட்டியில் 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ.35 லட்சம் செலவில் துணை சுகாதார மையம், சத்திரரெட்டியப்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.19.38 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, சிவஞானபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.17.62 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். பணிகளை தரமாக, விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வலியுறுத்தினார். ஆய்வின்போது திட்ட இயக்குர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

The post ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,Virudhunagar panchayat ,Kottanadham Panchayat ,Virudhunagar Panchayat Union ,15th Finance Committee ,Vachakkarapatti ,Panchayat Union ,Dinakaran ,
× RELATED அலங்கார மீன் வளர்க்க விண்ணப்பிக்கலாம்