×

பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 275 மனுக்கள் குவிந்தது

திருவாரூர், பிப்.13: திருவாரூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 18 மாணவர்களுக்கு ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான காசோலையை கலெக்டர் சாரு வழங்கினார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாரு தலைமை வகித்தார். இதில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, கல்வி கடன், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 275 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அந்த கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் அலுவலகத்தின் கீழ் தளத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாக சென்று அவர்களது குறைகள் குறித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 18 மாணவ, மாணவிகளுக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ ஒரு லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சாரு வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ சண்முகநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கனகலட்சுமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 275 மனுக்கள் குவிந்தது appeared first on Dinakaran.

Tags : Grievance Meeting ,Tiruvarur ,Collector ,Saru ,Tamil Development Department ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...