- காங்கிரஸ் எஸ்.சி.
- செயின்ட்
- சென்னை
- காங்கிரஸ்
- நிலை
- ஜனாதிபதி
- பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் குமார்
- தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி
- ST பிரிவு
சென்னை: காதலர்களை மிரட்டுவோர் மீதும், தாக்குதல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுபவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பிப்ரவரி 14ம் தேதி (நாளை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று கோயில்களில் சென்று வழிபடும் காதலர்களை, இந்து அமைப்பினர் அடித்து துன்புறுத்துவது வாடிக்கையாகி இருக்கிறது. அதோடு, அன்றைய தினம் காதலர்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பது போன்ற நிகழ்வுகள் கர்நாடகாவில் நடந்தன. அதை பின்பற்றி பல இடங்களில் காதலர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
காதலர்களை மட்டுமின்றி, காதலர் தினத்தையொட்டி பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகளை விற்பனை செய்யும் சிறு வணிகர்களைக் கூட இந்து அமைப்பினர் மிரட்டும் போக்கும் அதிகரித்துள்ளது. இந்த போக்கு இனியும் தொடர தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது. காதலர் தினத்தன்று தனி நபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். எனவே, காதலர்களை மிரட்டுவோர் மீதும், தாக்குதல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post காதலர்களுக்கு மிரட்டல், தாக்குதல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு வலியுறுத்தல் appeared first on Dinakaran.