×

வீட்டில் நகை கொள்ளை பழைய குற்றவாளி கைது

அண்ணாநகர்: முகப்பேர் புகழேந்தி சாலை பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (35). இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 11 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா கடந்த 5ம் தேதி ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகப்படும் வகையில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பவர்கள், கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பவர்கள், வழிப்பறி கொள்ளையர்கள் பற்றி விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பழைய குற்றவாளியான சுப்பிரமணி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் நகை கொள்ளை பழைய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Manjula ,Mukappher Pugahendi Road ,J.J. ,Nagar police station ,
× RELATED விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள்...