×

துணை முதல்வர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: மாநிலங்களில் துணை முதல்வர்கள் நியமனம் செய்வதற்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதுகுறித்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களில் முதல்வருக்கு இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு துணை முதல்வர் பதவிகள் உருவாக்கப்படுகிறது. இந்த நிலையில் துணை முதல்வர் பதவிக்கு தடை விதித்து அதனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் “துணை முதல்வர்கள் என்ற பதவி அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகும். இது அரசியல் சாசனப் பிரிவு 14 மற்றும் 15க்கு எதிராக இருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், “துணை முதல்வர்கள் என்பது வெறும் பெயரளவில் தான் உள்ளது.

குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் மாநிலங்களில் இருக்கும் மற்ற அரசியல் சாசன பதவிகள் கொண்ட எதையும் துணை முதல்வர் என்ற பதவியால் எந்தவித தொந்தரவும் கிடையாது. அதனால் துணை முதல்வர் பதவிக்கு தடை விதிக்கவோ அல்லது அதனை ரத்து செய்யவோ முடியாது.மேலும் அதுகுறித்த எந்தவித உத்தரவும் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post துணை முதல்வர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம்,...