×

மோடியின் உத்தரவாதம் எது? உத்தவ் தாக்கரே காட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் கங்காபூரில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: மோடிக்கு ஓட்டு போடும் படி மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் வருகிறது. அப்போது வரவிருக்கும் தேர்தலில் பாஜவுக்கு வாக்களிப்பீர்களா என்று அவர்களிடம் கேட்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் நான் முதலமைச்சராக இருந்தபோது விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்து அதையும் செயல்படுத்தினேன். மகாராஷ்டிராவில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியுமானால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜ அரசால் ஏன் முடியாது. எனவே ஒன்றிய அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். மோடியின் உத்தரவாதம் ஊழல் தலைவர்கள் பாஜவில் சேர்ந்தவுடன் எம்.எல்.ஏ.க்களாகவும், எம்.பி.க்களாகவும் ஆக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post மோடியின் உத்தரவாதம் எது? உத்தவ் தாக்கரே காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Uddhav Thackeray Kattam ,Gangapur, Maharashtra ,Shiv Sena ,UPD ,Uddhav Thackeray ,Maharashtra ,BJP ,Uddav Thackeray Kattam ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...