×

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி பெண் ஜோதிடர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சலங்கபாளையம் அய்யன்காடு காரிய குப்பண முதலி வீதியை சேர்ந்தவர் அன்பானந்தன் (53). இவரது மனைவி கோகிலாம்பாள் (52). ஜோதிடர்களான இவர்கள் 2 பேரும், ஜோதிடம் பார்க்க வந்தவர்களிடம், ‘‘நாங்கள் பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்ப்பதால் எங்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் நன்றாக தெரியும்.

பணம் கொடுத்தால் கட்டாயம் அரசு வேலை வாங்கி தருகிறோம்’’ என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி, பவானி ஒரிச்சேரிப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பூவழகன் (37) 5.50 லட்சம், ஈரோட்டை சேர்ந்த மலர் கொடி ரூ.5 லட்சம், கவுந்தப்பாடி செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரியிடம் ரூ.20 லட்சம் பெற்று அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதற்கு அன்பானந்தனின் மகளான கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் செவிலியராக பணியாற்றும் பவித்ராவும் (27) உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு குற்றப்பிரிவு போலீசார், அன்பானந்தன் மற்றும் பவித்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்து வந்த கோகிலாம்பாளை நேற்று கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி பெண் ஜோதிடர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Avarmanthan ,Kariya Kuppana Mudali Road ,Kaunthappadi Chalangapalayam, Ayyankadu, Erode district ,Kokilambal ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...