×

வீட்டிற்குள் புகுந்த முதலை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீட்டுக்குள் முதலை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ரஷீத். இவர், நேற்று அதிகாலை வீட்டின் அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டு முன் பகுதியில் பெரிய முதலை ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் முதலையை பத்திரமாக மீட்டனர். அந்த முதலை 8 அடி நீளமும், 110 கிலோ எடையும் இருந்தது. பின்னர் வனத்துறையினர் வக்கரமாரி ஏரியில் முதலையை பாதுகாப்பாக விட்டனர்.

The post வீட்டிற்குள் புகுந்த முதலை appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Abdul Rasheed ,Nanjalur ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...