×

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முதல்வர் வலியுறுத்தல்

அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்கள் தகுதியானவர்களைச் சென்றடைவதன் மூலமாகவே, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட இயலும். இந்த அடிப்படையிலேயே, 2021ல் நடைபெற்றிருக்க வேண்டிய தேசிய பத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்து மேற்கொள்ளப்படும்போது சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பையும் ஒருங்கிணைத்து நடத்திடுமாறு பிரதமரை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். நம்பகத்தன்மை வாய்ந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து உரிய கொள்கை முடிவுகளை எடுத்திட இந்த முயற்சி பெரும் உதவியாக இருக்கும் என்பதால் இக்கோரிக்கை ஒன்றிய அரசால் ஏற்கப்படும் என்றும் இந்த அரசு நம்புகிறது.

The post சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முதல்வர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...