×

தாமரைப்பாக்கம் அருகே குடிநீரை வாட்டர் சர்வீஸ் செய்ய பயன்படுத்தும் நபர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: கோடுவெளி கிராமத்தில் சட்ட விரோதமாக குடிநீரை வாட்டர் சர்வீஸ் செய்ய பயன்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமரைப்பாக்கம் அருகே கோடுவெளி கிராமத்தில் 1வது வார்டில் தனி நபர் ஒருவர் கார், பைக், வேன் போன்ற வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு தண்ணீர் வசதிக்காக அருகில் ஒரு தொட்டி கட்டி அதில் தண்ணீரை சேமித்து வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்வார். அதற்காக ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீரை தொட்டியில் சேமித்து அதை பயன்படுத்தி வருகிறார். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கேட்டால் மிரட்டும் தோனியில் பேசுகிறார். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தாமரைப்பாக்கம் அருகே குடிநீரை வாட்டர் சர்வீஸ் செய்ய பயன்படுத்தும் நபர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamaripakkam ,Oothukottai ,Koduveli village ,Kotuveli village ,Thamaraipakkam ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு