×

காளான் பெப்பர் ஃப்ரை

தேவையானவை:

காளான் – 250 கிராம்
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
சோம்பு அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
குடைமிளகாய் 1
உப்பு சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை பொடித்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கிய காளான், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும். அதனுடன் மிளகு பொடித்த கலவையை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வதக்கி, அதில் சிறிது நீர் தெளித்து கிளறி மூடிவிடவும். மிதமான தீயில் 10 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும். காளான் நன்கு வதங்கி வெந்ததும். நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கிவிடவும். காளான் பெப்பர் ப்ரை தயார்.

The post காளான் பெப்பர் ஃப்ரை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…