×

தக்காளி பூரி

தேவையானவை :

கோதுமை மாவு – 2 கப்,
ரவை – 1/4 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
புதினா – 4 இலை,
அரைத்த தக்காளி – 1 கப்,
சீரகம் – 1 ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகாய் தூள், எண்ணெய், சமையல் சோடா புதினாவை போட்டு கலந்து, தக்காளி கலவையை சேர்த்து மிதமான கெட்டியான மாவை உருவாக்கவும். 10 நிமிடம் கழித்து மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் தேய்த்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

The post தக்காளி பூரி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!