×

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் குவிந்துள்ளது: ஒரு கட்டு ₹300க்கு விற்பனை

அண்ணாநகர்: நாளைமறுநாள் காதலர் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ரோஜா பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கட்டு ரெட் ரோஜா 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வருகின்ற 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதல்ஜோடிகள், ரோஜா பூக்களை கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். இதனால் அன்றைய தினம் ரோஜா பூக்கள் விலை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், நாளை மறுநாள் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒசூர், பெங்களூரூ, கிருஷ்ணகிரி, தேவதானப்பள்ளி மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோஜா மற்றும் கலர் ரோஜா பூக்கள் கூடை, கூடையாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கட்டு ரெட் ரோஜா 300 க்கும் கலர் ரோஜா 250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறியதாவது;
காதலர் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் ரெட் ரோஜா, கலர் ரோஜா பூக்களை வாங்குவதற்கு காதலர்கள் அதிகமாக வருவார்கள். ஆனால் தற்போது ரோஜா பூக்களை வாங்குவதற்கு காதல் ஜோடிகள் ஆர்வம் காட்டுவது கிடையாது. ஆனால் காதல் மனைவிக்கு ரோஜாக்களை வாங்கி கொடுப்பதற்கு திருமணமானவர்கள் அதிகமாக வருகின்றனர். 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, இன்று காலை சில காதலர்கள்தான் ரோஜா வாங்க வந்துள்ளனர். ரோஜா பூக்களை வாங்குவதற்கு நாளை கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கூறினார்.

The post காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் குவிந்துள்ளது: ஒரு கட்டு ₹300க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Koyambedu market ,Annanagar ,Koyambedu ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...