×

பீகார் சட்டசபையில் சபாநாயகரை நீக்கி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

பீகார்: பீகார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இறுதியாக அவாத் பிகாரி சவுத்ரியை நீக்கும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. பீகார் சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் நிதிஷ்குமார் கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், நிதிஷ்குமார் அரசு ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு எதிரான தீர்மானத்திற்கு125 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 112 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து சபாநாயகர் நீக்கம் செய்யப்பட்டார். இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இன்று பீகார் சட்டசபையில் நிதீஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ள நிலையில், பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டு உள்ளார்.

சபாநாயகர் பதவியை இழந்த அவத் பிஹாரி சவுத்ரி
இதையடுத்து சபாநாயகர் சவுத்ரி தலைவர் பதவியில் இருந்து விலகினார். அப்பொழுது பேசிய அவர், அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட அவர், தான் இப்பதவியை வகித்த வரையில் எவ்வித பாகுபாடும் இன்றி விதிகளுக்கு உட்பட்டு சபையை நடத்தியதாகத் தெரிவித்தார்.

The post பீகார் சட்டசபையில் சபாநாயகரை நீக்கி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Bihar Assembly ,Bihar ,United Janata Platform ,Pa. J. K. ,Awad Bhikari Choudhry ,CM ,Uddhav Thackeray ,Dinakaran ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!