×

எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவுக்கு பட்டாசுகள் கொண்டு வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு

கேரள: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவுக்கு பட்டாசுகள் கொண்டு வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எர்ணாகுளம் மாவட்டம், புதியகாவில் அமைந்துள்ள பட்டாசு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில், வார்டு எண் 29 கவுன்சிலர் சுதா சுரேஷ், சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பட்டாசுகளை ஏற்றி வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். லாரி வெடித்து சிதறியதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. எர்ணாகுளம் மாவட்டத்தில் திற்ப்போனிதரா பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. வெடித்திருவிழாவுக்காக பட்டாசுகள் லாரியில் கொண்டுவந்து குடோனில் இறக்கும் பணி நடந்து வந்த நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று பேர் களமேசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், காவல்துறை அனுமதி பெறாமல் பட்டாசுகளை குடியிருப்புபகுதிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. வாகனத்தில் இருந்து இறக்கும் போது பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிவிபத்தில் பட்டாசு ஏற்றிச் சென்ற வாகனமும் நாசமானது. அருகில் இருந்த முதியவர்கள், குழந்தைகள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூரக்காட்டில் உள்ள வீட்டில் பட்டாசுகளை வைக்க கோயில் கமிட்டியோ, எந்த நபரோ அனுமதி கேட்கவில்லை என மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் உறுதி செய்துள்ளனர். இதேவேளை, புதியகாவு கோவிலில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவுக்கு பட்டாசுகள் கொண்டு வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ernakulam ,Kerala ,Ernakulam, Kerala ,Ward No. ,Councilor ,Sudha Suresh ,Nayiga, Ernakulam district ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது