×

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவுக்கு பட்டாசுகள் கொண்டு வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் பலி

கேரள: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவுக்கு பட்டாசுகள் கொண்டு வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியுள்ளார். பட்டாசுகளை ஏற்றி வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். லாரி வெடித்து சிதறியதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. எர்ணாகுளம் மாவட்டத்தில் திற்ப்போனிதரா பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. வெடித்திருவிழாவுக்காக பட்டாசுகள் லாரியில் கொண்டுவந்து குடோனில் இறக்கும் பணி நடந்து வந்த நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

The post கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவுக்கு பட்டாசுகள் கொண்டு வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kerala's Ernakulam ,Kerala ,Ernakulam ,Lorry ,Ernakulam, Kerala ,
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...