×

பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரத்தில் ஏரியில் கோழி இறைச்சி, தலைமுடி கழிவு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சிகுட்பட்ட ஏரியில் தலைமுடி, கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அணைக்கட்டு தாலுகா, கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள 6 வார்டுகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு தண்ணீர் ஆதாரமாக உள்ள ஏரியில் சமீப காலமாக தலைமுடி கழிவுகள், கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகளை கொட்டி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

மேலும், அருகிலுள்ள திப்ப சமுத்திரம் ஊராட்சியில் செயல்படும் முடி திருத்தம் கடை, கோழி இறைச்சி, மருந்து கடைகளிலிருந்து தினந்தோறும் இரவு நேரத்தில் இந்த ஏரியில் கொண்டு வந்து கழிவுகளை கொட்டிவிட்டு செல்வதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் திப்பசமுத்திரம் ஊராட்சியில் செயல்படும் கடைகள் கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரத்தில் ஏரியில் கோழி இறைச்சி, தலைமுடி கழிவு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Pallikonda ,Kilikrishnapuram Panchayat ,
× RELATED மினி லாரி மோதி உடைந்த மின்கம்பம் பள்ளிகொண்டா துளசி நகரில்