×

சமூக வலைதளங்களில் காதலியின் ஆபாசப் படங்களை வெளியிட்டவர் கைது

*கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆத்திரம்

திருவனந்தபுரம் : கேரளாவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து காதலியை பழிவாங்குவதற்காக அவருடன் உல்லாசமாக இருந்தபோது ரகசியமாக எடுத்த ஆபாச போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சக்திக்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் எட்வின் (31). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர்.

அப்போது காதலிக்குத் தெரியாமல் அவரது ஆபாச போட்டோ, வீடியோக்களை தன்னுடைய செல்போனில் எட்வின் எடுத்து வைத்திருந்தார். இதற்கிடையே சமீபத்தில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண், எட்வினுடனான தொடர்பை துண்டித்தார்.இது எட்வினுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. காதலியை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து உள்ளார்.

இது குறித்து அறிந்ததும் இளம்பெண் சக்திக்குளங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எட்வினை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சமூக வலைதளங்களில் காதலியின் ஆபாசப் படங்களை வெளியிட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Kollam, Kerala ,Dinakaran ,
× RELATED மோடியின் வருகையை முன்னிட்டு...