×

TANCET, CEETA ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

சென்னை: TANCET, CEETA ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான சீட்டா நுழைவு தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் http://tancet.annauniv.edu//tancet என்ற இணைய முகவரியில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 9ம் தேதியும், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் 10ம் தேதியும் நடைபெறுகிறது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

குறிப்பு: 2024-25 கல்வியாண்டில் இறுதி செமஸ்டர் / தகுதித் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் பட்டியல் இல்லாமல் TANCET/CEETA-PG 2024 க்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அவர்கள் கவுன்சிலிங் / சேர்க்கையின் போது மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post TANCET, CEETA ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : TANCET ,CEETA ,Anna University ,Chennai ,Dancet ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!