×

பணம் கேட்டு அடி,உதை; கார் ஓட்டுநர் தற்கொலை: ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் விபரீதம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநரான விஜயகாந்த் தன வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் கொடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி தனது உறவினர்கள் 2 பேருடன் சேர்ந்து விஜயகாந்திடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான விஜயகாந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. கந்துவட்டி கும்பலின் கொடுமை தாங்காமல் மக உயிரிழந்து விட்டதாக விஜயகாந்தின் தாய் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த சின்னசாமி அவரது உறவினர்கள் சக்தி, நந்தகோபால் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பணம் கேட்டு அடி,உதை; கார் ஓட்டுநர் தற்கொலை: ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Arani ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,Vijayakanth Dana ,Ragunatthapuram ,Sewur Uratchi ,Aarani ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க பட்டு கைத்தறி...