×

ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் கால்நடை விழிப்புணர்வு முகாம்

 

ஈத்தாமொழி, பிப்.12: ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியார் கோவிலில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. குமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாரிவேந்தன் தலைமை வகித்தார். நாகர்கோவில் கோட்ட உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

ராஜாக்கமங்கலம் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, நாய்களுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ரமேஷ், கால்நடை ஆய்வாளர் ஜோஸ்லின், உதவியாளர் இளைய குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணைத்தலைவர் செல்லத்துரை, 12வது வார்டு உறுப்பினர் ராஜதிருமேனி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் கால்நடை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Animal Awareness Camp ,Rajakamangalam Uratchi ,Ithamozhi ,Special Veterinary Health and Awareness Camp ,Department of Animal Care ,Ammachyar Temple ,Dr ,Barivendan ,Veterinary Care Department ,Kumari District ,Nagarko ,
× RELATED சொத்து குவிப்பு அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு