×

காற்று தடுப்பு மரங்களால் விளைச்சல் பெருகும் மாநகராட்சியில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள்

 

திருச்சி, பிப்.12: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார்நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் இன்றும் (12ம் தேதி), நாளையும் (13ம் தேதி) மராமத்து பணிகள் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக பெரியார்நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், கல்லாங்காடு, தெற்கு ராமலிங்கநகர், ஆல்பாநகர், மிளகுபாறை மற்றும் கருமண்டபம் ஆகிய பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

The post காற்று தடுப்பு மரங்களால் விளைச்சல் பெருகும் மாநகராட்சியில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Corporation Commissioner ,Vaithinathan ,Trichy Corporation ,Periyarnagar ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக ஓயாமரி சுடுகாடு 3 நாட்கள் தற்காலிகமாக மூடப்படும்