விருதுநகர், பிப். 12: விருதுநகர் மல்லாங்கிணறு ரோட்டில் கேகேஎஸ்எஸ்என் நகரில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ரத்தினகுமார்(33) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் கோயிலை திறந்து வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அம்மன் சிலை அருகில் இருந்த உண்டியல் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த ஐம்பொன் தாலி காணாமல் போயிருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். கோவில் சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த போது, பைக்கில் வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கோயிலுக்குள் புகுந்த உண்டியல் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரூரல் போலீசில் பூசாரி ரத்தினகுமார் கொடுத்த புகாரில் உண்டியல் திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
The post கோவில் உண்டியல் திருட்டு appeared first on Dinakaran.