×

கண்டமனூர் அருகே குப்பைக்கழிவு எரிப்பால் தொடர் புகை: சுகாதார சீர்கேடால் மக்கள் அவதி

 

வருசநாடு, பிப். 12: கண்டமனூர் அருகே குப்பை கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கண்டமனூர் கிராமம் புதுக்குளம் கண்மாய் செல்லும் சாலை பகுதிகளில் தினந்தோறும், கண்டமனூர் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகை மற்றும் துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் இது குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்தும் வருகின்றனர்.கண்டமனூர் கிராமவாசிகள் இது தொடர்பாக கூறுகையில், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் கண்டமனூர் கணேசபுரம் சாலையில் உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் வாகனங்களில் செல்கின்றனர். அப்பொழுது எரிக்கப்படும் குப்பை கழிவுகளின் புகை மற்றும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகையால் இந்த குப்பை கழிவுகளை வேறு இடங்களுக்கு மாற்றி, அதனை மக்கும் உரங்களாக மாற்ற வேண்டும். மேலும் இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post கண்டமனூர் அருகே குப்பைக்கழிவு எரிப்பால் தொடர் புகை: சுகாதார சீர்கேடால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kandamanur ,Varusanadu ,Kandamanur Village ,Pudukkulam ,Kanmai ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு