×

சிவகங்கை திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை,பிப்.12: சிவகங்கையில் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் அழகுசுந்தரம் வரவேற்றார். பின்னர் பந்தயத்தினை ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர் செயலாளர் துரை ஆனந்த் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் கலந்து கொண்டன. இதனை தொடர்ந்து சிவகங்கை மதுரை சாலையில் பெரிய மாட்டில் 22 ஜோடிகளும். சின்ன மாட்டில் 63 ஜோடிகளும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற பெரியமாட்டிற்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.16 ஆயிரமும், சின்ன மாட்டிற்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.16 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதில் ஒன்றிய செயலாளர் ராஜாமணி,யூனியன் சேர்மன் மஞ்சுளா பாலசந்தர், ஒன்றிய துனை செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட பிரதிநிதி மனோகரன், தியாகராஜன், ஒன்றிய பொருளாளர் பாண்டியராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சிங்கமுத்து, மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் தங்கச் செல்வம், மாணவரணி அமைப்பாளர் ராம்குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதியழகன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திருமலை குமணன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கை திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga DMK ,Sivagangai ,Minister ,Udayanidhi Stalin ,DMK ,Union Youth Team ,Akusundaram ,Union ,
× RELATED ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சிவகங்கை...