×
Saravana Stores

ராஜகம்பீரத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும வகையில் பயனுள்ள வகையில் ஜூலை11 முதல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட முத்தனேந்தல், வாகுடி, வெள்ளிக்குறிச்சி, பெரும்பச்சேரி, ராஜகம்பீரம், கால்பிரவு, மிளகனூர், அன்னவாசல், குவளைவேலி, தீத்தான்பட்டி, அரசகுளம்,

கட்டிக்குளம், விளாத்தூர், தஞ்சாக்கூர், பெரிய ஆவரங்காடு, சுள்ளான்குடி ஆகிய கிராமங்களுக்கு ராஜகம்பீரத்தில், மதுரை, ராமேஸ்வரம் சாலையில் உள்ள எம்.ஜே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட வடமாவளி, காட்டாம்பூர், கருங்குளம், பிராமணம்பட்டி, திருக்கோஷ்டியூர், சுன்னம்பிரப்பு, ஆலம்பட்டி, கருப்பூர், மாதவராயன்பட்டி,

திருக்களாப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு காட்டாம்பூர் சமுதாயக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறும். இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராஜகம்பீரத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Rajagambiram ,Sivagangai ,Sivagangai Collector ,Asha Ajith ,Chief Minister ,
× RELATED கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம்...