×

மணல் கடத்திய 3 பேருக்கு வலை

 

பேரணாம்பட்டு, பிப்.12: பேரணாம்பட்டு சாத்கர் கானாற்று பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த ஆனந்தன், வெங்கடேசன், மற்றும் குபேந்திரன் ஆகிய 3 பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

போலீசார் அங்கு வருவதை அறிந்த அவர்கள் தப்பி சென்றனர். தொடர்ந்து போலீசார் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

The post மணல் கடத்திய 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,Sub-Inspector ,Sarathkumar ,Satkar Kanattu ,Anandan ,Venkatesan ,Kubendran ,Dinakaran ,
× RELATED தளவாபாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது