×

போக்குவரத்து நெரிசலை குறைக்க பல நடவடிக்கை

 

திருப்பூர், பிப்.12: திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் அரசு விழா நேற்று நடந்தது. அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேச்சு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்து பேசியதாவது: திருப்பூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது முத்தமிழ் அறிஞர் கலைஞர். திருப்பூரை மாநகராட்சியாகவும், மாவட்டமாகவும் தரம் உயர்த்தியதும் நமது அரசுதான்.

வந்தாரை வாழ வைக்கும் மாவட்டமாகவும் திருப்பூர் விளங்கி வருகிறது. பனியன் உற்பத்தி திருப்பூரில் தொடங்கியபோது, அதனை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி வரியை நீக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இதுபோல சாய ஆலை தொழிலும் பிரச்சனையில் சந்திக்கும்போது பாதுகாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஏராளமான 4 வழிச்சாலைகள் அமைத்து இணைக்கப்பட்டுள்ளது.

நொய்யல் பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பாலம் கூட நமது ஆட்சி காலத்தில்தான் தொடங்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறாக ஏராளமான நலத்திட்டங்களை நமது மாவட்டத்திற்கு வழங்கி வருகிற நமது அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post போக்குவரத்து நெரிசலை குறைக்க பல நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Chikkanna College ,Minister ,M.P. Saminathan ,Youth Welfare ,Sports Development ,Udayanidhi Stalin ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...