×

கோவை மாஸ்டர் பிளான் ஆலோசனை வரவேற்பு

 

கோவை, பிப்.12: கோவை உள்ளூர் திட்ட பகுதிக்கான முழுமை திட்டமானது கடந்த 1994 அக்டோபர் 12ம் தேதி மாநகராட்சி, 7 பேரூராட்சிகள் மற்றும் 87 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 1287 ச.கி.மீ பரப்பளவில் கோவை உள்ளூர் திட்ட பகுதிக்கு முழுமைத் திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்து பொறுப்பேற்ற பின்னர் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்ற கோவை உள்ளூர் திட்ட பகுதியுடன் அதன் எல்லையில் 23 கிராம ஊராட்சிகள் மற்றும் குறிச்சி புது நகர் வளர்ச்சி குழும பகுதியினையும் சேர்த்து கோவை மாநகராட்சி, 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள் மற்றும் 66 கிராம ஊராட்சிகள் அடங்கிய பகுதியாக 1531.57 ச.கி.மீ பரப்பளவுடன் கோவை உள்ளூர் திட்ட பகுதிக்கான திருத்திய எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு முழுமை திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

மேலும், கோவை உள்ளூர் திட்ட பகுதிக்கான வரைவு முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரசால் பெறப்பட்டுள்ள கோவை முழுமை திட்டத்தில் எந்த ஒரு நபரும், தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் கோவை முழுமைத்திட்டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்கலாம்.

எனவே, அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவை உள்ளூர் திட்டப் பகுதிக்கான முழுமை திட்டத்தின் மீது பொது மக்களின் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் பெருவதற்கு ஏதுவாக முழுமைத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை, வரைபடம், நில உபயோக அட்டவணை ஆகிய ஆவணங்களை முழுமைத் திட்டத்திற்காக புதியதாக https://www.coimbatorelpa.com என்ற இணையதள முகவரி துவங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இணையதள முகவரி மூலமாகவும் மற்றும் கியூ.ஆர். குறியீடு மூலமாக முழுமைத் திட்டத்தின் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முழுமைத்திட்டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை மாஸ்டர் பிளான் ஆலோசனை வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...