×

நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் புழுதி பறக்கும் செம்மண் சாலை

ஆலந்தூர், பிப்.12: நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் புழுதி பறக்கும் செம்மண் சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து ஈக்காட்டுதாங்கலுக்கு செல்லும் டிபன்ஸ் காலனி சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழை வெள்ளத்தின்போது குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையில், செம்மண் கொட்டப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக வாகனங்கள் வேகமாக செல்லும்போது, புழுதி பறப்பதால் இருசக்கர வாகனம் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்படுகிறது.

தினந்தோறும் 5000க்கும் மேற்பட்டவர்கள் இந்த சாலை வழியாக தான் வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும். மேலும் பிரபல மருத்துவமனை, பிரசித்திபெற்ற முனீஸ்வரர், கூத்தாலம்மன் கோயில் போன்றவற்றிற்கு செல்பவர்களும் இந்த சாலை வழியாக முகத்தை மூடிக்கொண்டு புழுதியோடு புழுதியாக செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த செம்மண் சாலையை உடனடியாக தார்சாலையாக மாற்றி அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் புழுதி பறக்கும் செம்மண் சாலை appeared first on Dinakaran.

Tags : Nandambakkam ,Tibans Colony ,Alandur ,Nandambakkam Debons Colony ,Dipens Colony Road ,Parangimalai Cantonment ,Ekatuthangal ,Dinakaran ,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...