×
Saravana Stores

கூட்டணிக்காக பலவீனமானவர்களை தேடி அலையும் பாஜ : முத்தரசன் ‘கலாய்’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வேளாங்கண்ணியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இதை நிறுத்த பாஜ அரசு, இதுவரை எந்த முயற்சி எடுக்கவில்லை. பாஜ தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பாஜவுடன் யாரும் கூட்டணி வைக்க தயாராக இல்லை. அதிமுகவும் சேருவதற்கு தயாராக இல்லை. அப்படி சேர்ந்தால் அதிமுக பாதிக்கப்படும் என்பதால் பாஜவுடன் கூட்டணி சேர எடப்பாடி விரும்பவில்லை.

பாஜ ஒரு அணி என்பதை காண்பிப்பதற்காக பலவீனமானவர்களுடன் கூட்டணி வைத்துகொள்ள தேடி அலைகின்றனர். பாஜ கூட்டணியில் பலகீனமானவர்கள் தான் சேர்ந்துள்ளனர். 10 ஆண்டுகால பாஜ ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால் மீண்டும் பிரதமர் மோடியை ஆட்சியில் அமர வைக்க மக்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post கூட்டணிக்காக பலவீனமானவர்களை தேடி அலையும் பாஜ : முத்தரசன் ‘கலாய்’ appeared first on Dinakaran.

Tags : BJP ,Mutharasan 'Kalai ,Communist Party of India ,State Secretary ,Mutharasan Velankanniyil ,Sri Lankan Navy ,Tamil Nadu ,BJP government ,
× RELATED எரிந்து கொண்டிருக்கும் அதிமுகவை...