×

தோல்வி பயத்தால் தேர்தல் தேதி தள்ளிவைப்பு: ஆர்.எஸ்.பாரதி ‘அட்டாக்’

ராமேஸ்வரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு சில அறிவிப்புகளை செய்வதற்காக தேர்தல் தேதியை கூட தள்ளிப் போடுகிறது. ஒன்றிய அரசு விழப்போகிறது என தெரிந்து விட்டது. அதனால், புதிய, புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டம் இப்படி பல அறிவிப்புகளை செய்து எப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமோ அதை செய்கின்றனர். மார்ச் 6ம் தேதி வரை ஒன்றிய அரசுக்கு கையெழுத்திடும் அதிகாரம் இருக்கிறது.

அதற்குள் அழுகின்ற மீனவர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார்கள் என கூறி வாக்குகளை பெற்றனர். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க திமுக குரல் எழுப்பினால் அதற்கும் அனுமதிப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தோல்வி பயத்தால் தேர்தல் தேதி தள்ளிவைப்பு: ஆர்.எஸ்.பாரதி ‘அட்டாக்’ appeared first on Dinakaran.

Tags : RS ,Rameswaram ,DMK ,RS Bharti ,Union government ,RS Bharati 'Attack ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர்...