×

உபி பாஜ எம்எல்ஏக்கள் உட்பட 325 பேர் அயோத்தியில் தரிசனம்: சமாஜ்வாடி உறுப்பினர்கள் புறக்கணித்தனர்

அயோத்தி: அயோத்தி கோயிலில் பாஜ மற்றும் பல கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 325 பேர் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை லட்சக்கணக்கானோர் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் பார்த்தனர்.

இந்நிலையில் உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ,அதன் கூட்டணி கட்சிகளான,அப்னாதளம்,சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி,காங்கிரஸ்,ஆர்எல்டி, பகுஜன்சமாஜ் கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் நேற்று அயோத்திக்கு சென்று ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினர். இந்த பயணத்தில் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. லக்னோவில் இருந்து மொத்தம் 10 பஸ்களில் எம்எல்ஏக்கள் அயோத்திக்கு சென்றனர். 325க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இடம்பெற்றிருந்தனர். எம்எல்சிக்களையும் சேர்த்து 400 பேர் கோயிலுக்கு சென்றிருந்தனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post உபி பாஜ எம்எல்ஏக்கள் உட்பட 325 பேர் அயோத்தியில் தரிசனம்: சமாஜ்வாடி உறுப்பினர்கள் புறக்கணித்தனர் appeared first on Dinakaran.

Tags : UP BJP MLAs ,Darshan ,Samajwadi ,Ayodhya ,BJP ,Sami ,Ayodhya temple ,Kumbabhishekam ,Ram ,temple ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே