×

திமுகவுடன் இன்று மாலை விசிக, முஸ்லிம் லீக், கொமதேக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை

சென்னை: திமுகவுடன் இன்று மாலை விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று மாலையில் திமுக தனது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

கடந்த மக்களவை தேர்தலில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும்.

The post திமுகவுடன் இன்று மாலை விசிக, முஸ்லிம் லீக், கொமதேக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Vishika ,Muslim League ,Komadeka ,DMK ,CHENNAI ,Union Muslim League of India ,Indian Union Muslim ,
× RELATED விழுப்புரம் விசிக வேட்பாளர்...