×

பாஜ தலைவர்களை ஈடிக்கு தெரியாதா?: சரத்பவார் கேள்வி

புனே: பாஜ தலைவர்களை அமலாக்கத்துறைக்கு தெரியாதா? என்று சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார். தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் புனேவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது : மோடி ஆட்சியில் அமலாக்கத்துறை பாஜவின் ஏவலாளியாக மாறிவிட்டது. அமலாக்கத்துறை விசாரித்த 6,000 வழக்குகளில் 25 வழக்குகளில் மட்டு மே குற்றங்கள் தொடர்பான விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 85 சதவீதம் வழக்குகள் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மீது தொடரப்பட்டுள்ளது.

2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாஜவை சேர்ந்தவர்கள் யார் மீதும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது இல்லை. பாஜ தலைவர்கள் அமலாக்கத்துறை கண்ணில் தென்படவில்லையா? அதோடு மட்டுமல்லாமல் முந்தைய ஆட்சியில் பாஜவினர் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை கூட நிறுத்தப்பட்டது. இவ்வாறு சரத் பவார் கூறினார்.

 

The post பாஜ தலைவர்களை ஈடிக்கு தெரியாதா?: சரத்பவார் கேள்வி appeared first on Dinakaran.

Tags : ED ,BJP ,Sarathpawar ,Pune ,Nationalist ,Congress ,Sharathchandra Pawar ,Modi ,
× RELATED நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்...