×

யு19 உலக கோப்பையை வென்றது ஆஸி.

பெனோனி: ஐசிசி யு19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் இந்தியாவுடன் நேற்று மோதிய ஆஸ்திரேலியா 79 ரன் வித்தியாசத்தில் வென்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா யு19 அணி முதலில் பேட் செய்தது. சாம் கோன்ஸ்டாஸ் டக் அவுட்டானாலும், மற்றொரு தொடக்க வீரர் ஹாரி டிக்சன் 42 ரன், கேப்டன் ஹக் வெய்ப்ஜென் 48, ஹர்ஜஸ் சிங் 55, ஹிக்ஸ் 20, ஆலிவர் பீக் ஆட்டமிழக்காமல் 46 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது. இந்தியா யு19 பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2, சவுமி பாண்டே, முஷீர் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 50 ஓவரில் 254 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இந்தியா… பியர்ட்மேன், ராப் மேக்மில்லன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் தோல்வியின் பிடியில் சிக்கியது. ஓரளவு தாக்குப்பிடித்த ஆதர்ஷ் சிங் 47 ரன் (77 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), முஷீர் கான் 22, முருகன் அபிஷேக் 42 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), நமன் திவாரி 14* ரன் எடுக்க, சக இந்திய பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கத் தவறினர். இந்தியா யு19 அணி 43.5 ஓவரில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பியர்ட்மேன், மேக்மில்லன் தலா 3, விட்லர் 2, சார்லி, ஸ்ட்ரேகர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆஸ்திரேலியா 4வது முறையாக இளைஞர் உலக கோப்பையை முத்தமிட்டது (1988, 2002, 2010, 2024). 5 முறை சாம்பியனான இந்தியா இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது.

 

The post யு19 உலக கோப்பையை வென்றது ஆஸி. appeared first on Dinakaran.

Tags : Aussies ,U19 World Cup ,Benoni ,Australia ,ICC U19 World Cup ODI ,India ,Willowmoor Park, ,Dinakaran ,
× RELATED ஆஸிக்கு 279 ரன் இலக்கு: 4 விக்கெட் இழந்து திணறல்