×

சென்னை ஓபன் டென்னிஸ் சுமித் நாகல் சாம்பியன்

சென்னை: ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லூகா நார்டியுடன் (20 வயது) நேற்று மோதிய சுமித் நாகல் (26 வயது) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

நேற்று முன்தினம் நடந்த இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாகேத் மைனேனி – ராம்குமார் ராமநாதன் இணை 3-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ரித்விக் சவுதாரி – நிக்கி பூனச்சா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

 

The post சென்னை ஓபன் டென்னிஸ் சுமித் நாகல் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Chennai Open Tennis ,Sumit Nagal ,CHENNAI ,ATP Challenger Chennai Open tennis ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...