×

ஒரு சிலர் விலகியதால் ‘இந்தியா’வுக்கு பாதிப்பு இல்லை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் சச்சின் பைலட் உறுதி

புதுடெல்லி: ஒரு சிலர் கூட்டணியில் இருந்து விலகி சென்றதால் இந்தியா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் பொது செயலாளர் சச்சின் பைலட் கூறி உள்ளார். காங்கிரஸ் பொது செயலாளரும் சட்டீஸ்கர் காங்கிரஸ் பொறுப்பாளருமான சச்சின் பைலட் நேற்று பேட்டியளிக்கையில், தேர்தலில் தங்களுக்கு 370 இடங்களும், கூட்டணியும் சேர்த்து 400 இடங்களும் என்று பாஜவின் தலைவர்கள் பேசுவது தற்போது களத்தில் உள்ள மதிப்பீடுகளை பற்றி எதுவும் குறிப்பிடாமல் வெறும் சொல்லாடல்களாக தான் உள்ளன. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை சட்டீஸ்கர் மாநிலத்தில் சென்று கொண்டிருக்கிறது.இந்த யாத்திரையினால், மக்களவை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறுவது தவறாகும். யாத்திரை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை விஷயங்களை கட்சி மேலிடம் மற்றும் மாநில தலைமைகள் கவனித்து வருகின்றன.பல்வேறு கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு விவகாரத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேரில் கவனித்து வருகிறார். கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார், ஜெயந்த் சவுத்ரியின் கட்சிகள் விலகினாலும், இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.தேஜ கூட்டணியில் இருந்து அகாலிதளம்,சிவசேனா,பிடிபி, அதிமுக கட்சிகள் விலகியுள்ளன. இதனால்,ஆளும் கூட்டணிக்கு தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தியா கூட்டணி பலமாக உள்ளது.கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் நீடிக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தா பானர்ஜியுடன் பேசி தீர்வு காணப்படும்’’ என்றார்.

 

The post ஒரு சிலர் விலகியதால் ‘இந்தியா’வுக்கு பாதிப்பு இல்லை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் சச்சின் பைலட் உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Union minister ,Sachin Pilot ,NEW DELHI ,Congress ,General Secretary ,general secretary of ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...