×

அமெரிக்காவில் மர்ம நபர் தாக்கியதில் இந்திய வம்சாவளி நிபுணர் மரணம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், மர்ம நபர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களில் மட்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 7 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அலெக்சாண்டிரியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியான விவேக் தனேஜா (41) என்பவர், தனேஜா டைனமோ டெக்னாலஜிஸின் இணை நிறுவனராகவும், தகவல் தொழில்நுட்ப நிபுணராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், உணவகத்திற்கு வெளியே மர்ம நபர்களால் விவேக் தனேஜா தாக்கப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இருந்ததால், அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் சிகிச்சை பலனின்றி விவேக் தனேஜா உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அமெரிக்காவில் மர்ம நபர் தாக்கியதில் இந்திய வம்சாவளி நிபுணர் மரணம் appeared first on Dinakaran.

Tags : America ,WASHINGTON ,US ,Alexandria ,
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை