×

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி சிலுவைப்பட்டி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான 3 டன் பீடி இலைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைபர் படகுகள், ஒரு சரக்கு வாகனம், டூவீலர் ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள், டீசல், பீடி இலைகள் மற்றும் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்துவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது சிலுவைபட்டி கடற்கரை பகுதியில் போலீசாரைக் கண்டதும் கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து போலீசார் 2 பைபர் படகுகளில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 84 மூட்டைகளில் இருந்த 3 டன் எடையுள்ள பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைபர் படகுகள், ஒரு சரக்கு வாகனம், டூவீலர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Thoothukudi ,Tuticorin district ,Siluvaipatti beach ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...