×

நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் அறிவித்தது திமுக. பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் நாடாளுமன்ற தொகுதி வாரியாக கூட்டங்கள்

சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள் துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024 இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கழக முன்னணியினர் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கீழ்கண்டவாறு நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர். பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

* நாள் : 16-2-2024 (வெள்ளிக்கிழமை)

சிவகங்கை
திருநெல்வேலி
விழுப்புரம்
தூத்துக்குடி
கடலூர்
திருபெரும்புதூர்
ஈரோடு
நாமக்கல்
கன்னியாகுமரி
மயிலாடுதுறை
திருவண்ணாமலை

* நாள் : 17-2-2024 (சனிக்கிழமை)

கிருஷ்ணகிரி
திருச்சி
திருப்பூர்
அரக்கோணம்
மதுரை
விருதுநகர்
இராமநாதபுரம்
வேலூர்
கள்ளக்குறிச்சி
கோவை
திண்டுக்கல்
சிதம்பரம்

* நாள் : 18-2-2024 (ஞாயிற்றுக்கிழமை)

திருவள்ளூர்
தஞ்சாவூர்
பெரம்பலூர்
கரூர்
புதுச்சேரி
பொள்ளாச்சி
காஞ்சிபுரம்
தருமபுரி
நாகப்பட்டினம்
தேனி
நீலகிரி
தென்காசி
சேலம்
ஆரணி

 

The post நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் அறிவித்தது திமுக. பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் நாடாளுமன்ற தொகுதி வாரியாக கூட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,PARLIAMENTARY CONSTITUENCY ,Chennai ,2021 legislative elections ,Stalin ,to Restore ,Parliament Constituency ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...